உளவுத்துறை கண்காணிப்பில் விஜய் சேதுபதி ? அதிர்ச்சி தகவல்

vijaysethupathi
Last Modified செவ்வாய், 31 ஜூலை 2018 (12:26 IST)
சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு அதிக குரல் எழுப்பி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.  இதனால் இவரை தேடிவந்து, பல்வேறு குழுவினர் சந்தித்து பாராட்டுகிறார்களாம். அவர்களுக்கு விஜய் சேதுபதி தன்னால் முடிந்த பண உதவிகளை செய்கிறாராம்.  இந்நிலையில் விஜய் சேதுபதியை சந்திக்கும் குழுக்களில் சில  ஆளும் அரசுக்கு எதிராக செயல்படுபவையாம். இந்த தகவலை அறிந்த போலீசார் விஜய் சேதுபதியை கண்காணிக்க துவங்கினார்களாம்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சிலர் விஜய் சேதுபதியிடம் கேட்டார்களாம், அதற்கு அவர் கூறுகையில், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன் நான். சமூகத்தில் எழும் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். என் கருத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்னை வந்து சந்திக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகள் அவர்களது குழுக்கள் எப்படி பட்டது. அவர்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை உடையவர்களா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.அது  தேவையும் இல்லை என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :