வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (17:03 IST)

சீதக்காதி குறித்து என்ன சொல்கிறார் விஜய் சேதுபதி!

பொதுவாக கலை பகுப்பாய்வு செய்யப்படும்போது அல்லது பாராட்டப்படும்போது, ​​அது நிச்சயமாக 'Soulful' என்ற வார்த்தையால் போற்றப்படும். ஒரு உன்னத  கலைஞரின் வாழ்க்கையில்  குறிப்பிடத்தக்க வகையில் வாழ்நாள் மைல்கல் சாதனையாக ஒரு படம் அமையும். அப்படிவிஜய் சேதுபதி கருதும் ஒரு கதாபாத்திரத்துக்குள் வந்திருக்கிறார் "சீதக்காதி "  படம்  மூலமாக.


சீதக்காதியின் முதல் பார்வையான 'மேக்கிங் ஆஃப் ஐயா'வை விஜய் சேதுபதி கொண்டடும் நேரத்தில், தனது உற்சாகத்தை வார்த்தைகளை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். "சீதக்காதி சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அவர் தோற்றம் எப்படி இருக்கும் என நாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும்போது, விஜய் சேதுபதி அதை பற்றி கொஞ்சம் கூறுகிறார். அதில், "நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்" என்றார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற மிகச்சிறந்த நகைச்சுவை படத்தை தந்த விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் காம்பினஷனில், இதுவரை பார்க்காத ஒரு படம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Passion ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறார்கள்.