திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (11:53 IST)

இதற்காகவே ரஜினி படத்தில் நடிக்கிறேன் - விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய  பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களிலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார். 
 
மேலும், சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, ரஜினி படத்தில் அவருக்கு எது மாதிரியான கதாபாத்திரம் என்கிற எதிர்ப்பு பலருக்கும் இருந்தது.
 
இந்நிலையில், இதுபற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “கார்த்திக் சுப்புராஜுக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும், 40 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினி. அது சுலபமான காரியம் அல்ல. எப்படி பேசினால், நடித்தால், நின்றால் ரசிகர்களுக்கு பிடிக்கும். வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என அனைத்தையும் கணித்து அவர் இத்தனை வருடங்களாக ரசிகர்களை தன் பிடியில் வைத்திருக்கிறார். எனவே, அதை கவனிக்கவே இந்த படத்தில் நடிக்கிறேன். கண்டிப்பாக அவருடன் நடிப்பது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.