1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (12:00 IST)

விஷாலை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீசார்

பூட்டை உடைத்தே தீருவேன் - போலீசாரிடம் மல்லுக்கட்டும் விஷால் 


 
நடிகர் விஷாலுக்கு எதிராக போர்கொடி  தூக்கியுள்ள  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். தமிழ்ராக்கர்ஸிற்கு மறைமுக பார்ட்னராக இருந்து நடிகர் விஷால் செயல்படுவதாக முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால், நடிகர் சங்கத்தில் செயலாளர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார். 
 
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால் நேற்று சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு தயாரிப்பாளர் பலர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர் . 
 
மேலும் அவர்கள்,  சங்க தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் மீது கண்டிப்பு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக விஷால் மீது முன் வைத்தனர். 
 
இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷாலின் எதிர் தரப்பினரால் போடப்பட்ட பூட்டுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பதை அடுத்து இன்று அச்சங்கத்தின் தலைவர் விஷால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். 
 
பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் விஷாலை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.