வியாழன், 14 ஆகஸ்ட் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2025 (13:07 IST)

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

நடிகர் சூர்யா ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அவரால் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ள ரெட்ரோ மற்றும் அதற்குப் பின் வெளியாக போகும் சூர்யா 45 ஆகிய படங்கள் கூட வெற்றி உறுதி என்று சொல்ல முடியாத நிலைதான் உள்ளது.
 
இதற்கு முக்கிய காரணமாக அவர் தேவையில்லாத அரசியல் கருத்துக்களை தெரிவித்ததுதான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, புதிய கல்வி கொள்கை உட்பட பல்வேறு விஷயங்களுக்கு பேசிய நடிகர் சூர்யா, திமுக ஆட்சி வந்த உடன் அப்படியே ஆப் ஆகிவிட்டார். அதன்பின் நடந்த பல கொடூரங்கள் குறித்து வாயை திறக்கவில்லை.
 
அதேபோல், அவரது மனைவி ஜோதிகாவும் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதை மனதில் வைத்து தான் சூர்யாவின் படத்தை சினிமா ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதனால் தான் அவரால் இன்னும் ஒரு வெற்றியை கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது.
 
அரசியல் கருத்தை கூறுவதென்றால், எந்த ஆட்சி வந்தாலும் தைரியமாக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை கூற வேண்டும். இல்லாவிட்டால் அமைதியாக இருக்க வேண்டும். சூர்யா போன்ற போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.