1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (10:20 IST)

பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இத்தனைக் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளாரா விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 7 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகமான “பிச்சைக்காரன் 2” சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, நடித்தும் இருந்தார்.

படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதுடன், வெற்றிகரமாக வசூல் செய்தது. தமிழுக்கு சரிசமமாக தெலுங்கிலும் நல்ல வசூலை பெற்றது. முதல் பாகம் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் இல்லை என்றாலும், இந்த படமும் ஹிட் ஆனது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக விஜய் ஆண்டனிக்கு 30 கோடி ரூபாய் ஒட்டுமொத்தமாக லாபமாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.