1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (10:19 IST)

ஒரு கையில பெரியார்.. இன்னொரு கையில விநாயகர்! – வணங்கான் போஸ்டர் வைரல்!

vanangaan
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள அதேசமயம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் வணங்கான். இந்த படத்திற்கான முதல்கட்ட ஷூட்டிங் கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. ஆனால் திடீரென இந்த படப்பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறுவதாகவும், ஆனால் படம் வேறு நடிகர்களை வைத்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.ப்ரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையையும், மறு கையில் விநாயகர் சிலையையும் வைத்திருக்கிறார். ‘கடவுளே இல்லை’ என்று சொல்லி விநாயகர் சிலையை உடைத்தவர் பெரியார். இந்த இரண்டு முரண்பட்ட சிலைகளையும் அருண் விஜய் தன் கைகளில் வைத்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த படம் ஆத்திகம், நாத்திகம் இடையேயான சண்டை குறித்ததாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Edit by Prasanth.K