திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:21 IST)

சட்டப்பேரவையில் மீசையை முறுக்கி தொடையை தட்டிய என்.டி.ஆர் பாலகிருஷ்ணா.. பெரும் பரபரப்பு..!

balakrishna
சினிமாவில் நடிப்பதை போலவே ஆந்திர மாநில சட்டப்பேரவையில் என்டிஆர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கி தொடையை தட்டியது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் இன்று சட்டப்பேரவையில் பிரச்சனை செய்தனர். 
 
அப்போது சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடிகரும் தெலுங்கு தேச எம்எல்ஏயுமன பாலகிருஷ்ணா மீசையை முறுக்கு தொடையை தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ஆனால் அமைச்சர் ராம்பாபு இதற்கு பதில் அளித்தபோது இதையெல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ள வேண்டும், இங்கே வேண்டாம், தைரியம் இருந்தால் அருகில் வாருங்கள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran