செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (22:46 IST)

நீண்ட தாமதத்திற்கு பின் 'பேரன்பு' ரிலீஸ் குறித்த தகவல் அறிவிப்பு

கற்றது தமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கிய அடுத்த படம் 'பேரன்பு.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருந்தும் இந்த படம் முடிந்து ஒருசில வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியே இருந்தது. சென்சார் பிரச்சனைதான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் ஒருவழியாக இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், அருள்தாஸ், சுராஜ், சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், சூர்யா பிரதாபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு மாபெரும் வரவேற்பை ஏற்கனவே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.