செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 8 டிசம்பர் 2018 (10:31 IST)

பாலியல் தொழிலாளி என திட்டிய மேனேஜர்: நடிகை ஷரின் போலீசில் புகார்

வீர், ரெடி, ஹேட் ஸ்டோரி-3 உள்பட பல படங்களில் நடித்தவர் ஷரின் கான். 



இவர் தமிழில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் தனக்கு  மானேஜராக அஞ்சலி அதா என்ற பெண்ணை வைத்துக் கொண்டார். இதற்கு முன்பாக அஞ்சலி, ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரணாவத் ஆகியோருக்கு மானேஜராக இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலி,  ஷரின் உடன் நான்கு மாதங்கள் பணியாற்றிய நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
 
இதனால் ஷரின், அஞ்சலியை மானேஜர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறுஒருவரை அந்த பொறுப்பில் நியமித்தார். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி, ஷரின் கானை பாலியல் தொழிலாளியை போன்றவர் என்று கடுமையாக திட்டி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் கோபம் அடைந்த நடிகை ஷரின் கான், மும்பையில் உள்ள கர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அஞ்சலி அதா தன்னை பாலியல் தொழிலாளி என்று அவதூறாக பேசி புகழை கெடுக்க முயற்சி செய்கிறார் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.