1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (15:23 IST)

மம்முட்டியின் யாத்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் மீண்டும் மம்முட்டி நடித்துள்ள "யாத்ரா" படத்தில் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர்.


 
வாழ்க்கை வரலாறுகளை படமாக்குவதில் இந்திய இயக்குநர்கள் அதிக முனைப்புக் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கு சினிமாவில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. 
 
'யாத்ரா’ எனப் பெயரிடப் பட்டுள்ள இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கிறார். இதனை இயக்குநர் மகி.வி.ராகவ் என்பவர் இயக்குகிறார். தவிர, ராவ் ரமேஷ், ஜெகபதி பாபு, சுஹாசினி, போசனி கிருஷ்ண முரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 
 
'யாத்ரா' படத்தை ‘70எம்எம்  எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கே இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
தற்போது இந்தப் படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.