1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Pathala pathala song video release update

பத்தல பத்தல பாடலின் வீடியோ ரிலீஸ் அப்டேட்! ரசிகர்கள் குஷி!

கமல்
விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த படமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல.. பத்தல..” பாடலில் இடம்பெற்றிருந்த ‘ஒன்றியத்தின் தப்பாலே’ போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டன. முன்னதாக இந்த வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த பாடல் இணையத்தில் பெரிய அளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. யுடியூபில் 5 கோடி பேரால் இதுவரை இந்த பாடல் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை இந்த பாடலின் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவின் படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்?