திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (17:41 IST)

நடிகர் ஆர்யாவின் சைக்கிள் இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில், பா.ரஞ்சித் இயகக்த்தில்,  கடந்தாண்டு வெளியான சர்பாட்டா பரம்பரை என்ற படம்  மிகப்பெரிய வெற்றியையும், வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

இதையடுத்து, அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமா நடிகர்களில் உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஆர்யா, தினமும் ஜிம்முக்கு செல்வது மட்டுமின்றி, சைக்கிளிங் சென்று வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் அவ்வப்போது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிடுகிறார்.

சைக்கிள் விரும்பியான அவர்,  விலையுயர்ந்த சைக்கிள்களை தன் பயிற்சிக்கு பயன்படுத்துகிறார்.  தற்போது அவர், ஜயன்ட் டெபி என்ற சவிலை உஅர்ந்த சைக்கிளை வாங்கியுள்ளார். அதன் விலை  ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இன்று இந்த சைக்கிளில் அவர் 50 கிமீ பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.