1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (10:08 IST)

நிர்வாணமாவா நடிச்சேன்? நடிகை ஓவியா ஆவேசம்!!!

90 ml படத்தால் ஓவியாவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் அதுகுறித்து பேசியுள்ளார்.


ஓவியா நடித்துள்ள '90ml' அடல்ட் காமெடி திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ஸ்நீக் பீக் காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும் ஏ ஜோக்குகளும், ஆபாச காட்சிகளும் இருப்பதால் ஓவியா ஆர்மியினர் உள்பட பல சமூக ஆர்வலர்கள் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஓவியாவிற்கு கடுமையான கண்டனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மக்களின் இந்த கண்டனங்களை கேள்விபட்ட ஓவியா, கடும் கடுப்பாகி, நான் ஒன்னும் நிர்வாணமாக நடிக்கவில்லையே. பெண்கள் என்றால் இப்படிதான் நடிக்க வேண்டும் இப்படி தான் உடையணிய வேண்டும் என சட்டம் இல்லையே. 

இப்படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேனே தவிர ஆபாசமாக நடிக்கவில்லை. ஆகவே எனது லிமிட் எனக்கு தெரியும். அவரவர்கள் அவரவர்களின் வேலையை பார்த்தால் நல்லது என பேசினார்.