புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (09:35 IST)

கட்சி மாநாடு அளவு கூட்டம்.. புஷ்பாவுக்கு இவ்ளோ ரசிகர்களா? - ஸ்தம்பித்த பாட்னா!

Pushpa 2 Patna

நேற்று புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு நடந்த நிலையில் அதற்கு குவிந்த ரசிகர்களின் கூட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

 

தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து பெரும் ஹிட் அடித்த படம் புஷ்பா. இதன் இரண்டாவது பாகமான புஷ்பா 2 தி ரூல் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீப்ரசாத் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பீகாரின் பாட்னா நகரில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. புஷ்பா படத்திற்கு தென் மாநிலங்களை விடவும் வட மாநிலங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜூனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

பலர் நுழைவு பாஸ் இல்லாமலே கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காந்தி மைதானம் முழுவதும் கட்சி மாநாடு போல ஏராளமான மக்கள் கூட்டம் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K