வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (09:20 IST)

புஷ்பா 2 படத்துக்கு இசையமைக்கும் நான்கு இசையமைப்பாளர்கள்.. யார் யார் தெரியுமா?

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் பின்னணி இசைக்காக நான்கு இசையமைப்பாளர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன், சாம் சி எஸ்,  அஜனீஷ் லோகநாத மற்றும் இன்னுமொரு இசையமைப்பாளர் என நான்கு பேர்  தனித்தனியாக இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் பின்னணி இசைக்கு ஏன் பிற இசையமைப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விளக்கம் படக்குழுவால் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.