அடுத்ததாக பேமிலி செண்ட்டிமெண்ட் கதை – தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா ?

Last Modified செவ்வாய், 14 ஜனவரி 2020 (13:08 IST)
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்தான் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தற்போது நடித்துவரும் மாஸ்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தை யார் இயக்குவது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. விஜய் மீண்டும் முருகதாஸோடு இணைவதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது தளபதி 65 படத்தின் இயக்குனர் குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய குடும்ப திரைப்படங்களை இயக்கி கடந்த சில வருடங்களாக பேமிலி ஆடியன்ஸை தன் திரைப்படங்களுக்கு இழுத்து வரும் பாண்டிராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் என சொல்லப்படுகிறது.



இதில் மேலும் படிக்கவும் :