செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (16:42 IST)

சூர்யா படத்தின் ஷூட்டிங் பற்றி அறிவித்த இயக்குனர் பாண்டிராஜ்!

இயக்குனர் பாண்டிராஜ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கான பின் தயாரிப்பு வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அதை அறிவித்துள்ளார் பாண்டிராஜ். அதில் ‘அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 2021 நமக்கு சிறப்பான ஆண்டாக அமையும். உங்கள் எதிர்பார்ப்பும் ஆவலும் புரிகிறது. ஆனால் ஷூட்டிங் பிப்ரவரியில்தான். இன்னும் 2 கேரக்டர்கள் உறுதியாக வேண்டும்.  3 வாரங்களில் சம்பவம் தொடங்கும்… காத்திருப்போமே’ எனக் கூறியுள்ளார்.