1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:10 IST)

ஆர் கே சுரேஷ் நடிப்பில் விசித்திரன்… டிரைலரை வெளியிட்ட சூர்யா!

ஆர் கே சுரேஷ் நடிப்பில் இயக்குனர் பாலா தயாரித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த ’வர்மா’ படம் ரிலீஸ் ஆகாத நிலையில் அவருடைய அடுத்த படம் எது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. பாலாவின் பி ஸ்டுடியோ ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை தயாரித்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் மலையாள படமான ஜோசப்பின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த விசித்திரன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஆர் கே சுரேஷுக்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என சொல்லப்படுகிறது. இந்த டீசரை சூர்யா ரிலீஸ் செய்ததால் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.