செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:24 IST)

பாலா தயாரிப்பில்...பிரபல நடிகர் பட டீசரை வெளியிட்ட சூர்யா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா, பாலா தயாரிப்பில், பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள விசித்திரன் என்ற படத்தில் டீசரை  வெளியிட்டுள்ளார்.

சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பாலா. கடந்தாண்டு அவர் விக்ரம் மகன் துருவ்-ஐ வைத்து இயக்கிய வர்மா படம் சரியாக இல்லை என விக்ரமுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு வரவே அப்படத்திலிருந்து பாலா நீக்கப்பட்டார்.

சமீபத்தில் பாலா இயக்கிய வர்மா படம் வெளியானாலும் அது வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் தற்போது பாலா தயாரிப்பில், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் விசித்திரன் படத்தை உருவாக்கிவருகிறார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பத்மகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன் லிங்க் கிழே தரப்பட்டுள்ளது