1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (13:29 IST)

வெறித்தனமான உடல்கட்டில் விஷ்ணு விஷால்! ரசிகர்களைக் கவர்ந்த புகைப்படம்!

நடிகர் விஷ்ணு விஷால் சிக்ஸ் பேக்கில் இருக்கும் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் அவர் நடித்த நீர்ப்பறவை, ஜீவா, ராட்சசன், முண்டாசுப்பட்டி  மற்றும் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.

அதையடுத்து இப்போது கம்ர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார் விஷ்ணு விஷால். சமீபகாலமாக தனது படங்களில் தன்னை நல்ல உடல்கட்டுடன் காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார் விஷ்ணு விஷால். அதையடுத்து சிக்ஸ்பேக் உடலுக்கு மாறியுள்ள அவர் இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.