பாலிவுட் நடிகையை காதலிக்கும் அஞ்சலி - சர்ச்சைக்குள்ளாகும் வீடியோ!
தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் பட வேலை ஏதுமில்லாததால் பாவக்கதைகள் என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இதில் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் மற்றும் அஞ்சலி இருவரும் லெஸ்பியன் காதலர்களாக நடித்து சர்ச்சை கிளப்பியுள்ளனர். அதன் வீடியோ ஒன்றை அஞ்சலி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.