செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (17:11 IST)

ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் ஜோடியின் சூப்பர் வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மெகா ஹிட் படத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் காலத்திற்கும் அழியாத கேரக்டராக பதிந்து பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் போன நடிகர், நடிகைகள் இங்கு ஏராளம். அந்தவகையில் தமிழ் சினிமாவில் காதல் படத்தில் நடித்து பெரும் பிரபலமானவர் நடிகை சந்தியா. 
 
பரத் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சரியாக இன்றைய தினத்தில் அதாவது டிசம்பர் 17 2004ம் ஆண்டில் வெளியாகியது. அதனை நினைவுப்படுத்தும் வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பரத் " என் வாழ்க்கையை மாற்றிய நாள், காதல் என்னுடைய பயணத்தில் ஒரு மைல்கல்" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். 
 
இதனை கண்ட ரசிகர்கள்,  அடடே... செகண்ட் பார்ட் ஏதாச்சும் எடுக்குறீங்களா என கேட்டு  கமெண்ட் செய்து வருகின்றனர். பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஜோடியின் புகைப்படத்தை பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோ அந்த புகைப்படங்கள்...