இதுக்கு மட்டும் வந்துடுவாரே பா.ரஞ்சித்? நெட்டிசன்கள் ஆவேசம்

Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (06:52 IST)
ஒரு திரைப்படம் ஜாதி கண்ணோட்டமில்லாமல் ஒரு நல்ல கருத்தை கூறினால் கூட அதிலும் ஜாதியை புகுத்தி விமர்சனம் செய்வதும் பாராட்டு தெரிவிப்பதும் ஒருசிலரின் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அந்த படத்தை ரசிப்பவர்கள் கூட முகம் சுழிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறது. பரியேறும் பெருமாள்’ என்ற நல்ல படத்திற்கு பல விமர்சகர்கள் ஜாதிச்சாயம் பூசி, அந்த படம் ஒரு ஜாதிப்படம் என்றே முத்திரை குத்திவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கும் ஒருசிலர் ஜாதி முத்திரை காட்ட தொடங்கிவிட்டனர். இயக்குனர் வெற்றி மாறன் எந்த இடத்திலும் ஜாதியை குறிப்பிடாத நிலையில் தனுஷ் கேரக்டரின் ஜாதி குறித்து சிலர் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் இதுபோன்ற விஷயங்களில் முதல் ஆளாக தலையிட்டு தனது ஜாதிப்பாசத்தை வெளிப்படுத்தும் இயக்குனர் பா.ரஞ்சித் இன்று தனது டுவிட்டரில்,

‘தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன்
தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ்

நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு

மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!

என்று பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆவேச பதிலடியை கொடுத்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :