இந்த கோணத்தில் எடுக்கப் பட்டிருந்தால் உலக தரத்தில் இருந்திருக்கும் – வெக்கை ஆசிரியர் பூமணி கருத்து !
அசுரன் படம் சிதம்பரத்தின் பார்வையில் எடுக்கப்பட்டு இருந்தால் உலகத்தரத்துக்குப் போயிருக்கும் என வெக்கை நாவலின் ஆசிரியர் பூமணி தெரிவித்துள்ளார்.
வடசென்னை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி தமிழகம் எங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலிலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அசுரன் படத்துக்குப் பிறகு வடசென்னை – 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த வெற்றிமாறன் இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் நாவல் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக நாவலாசிரியர் பூமணி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் ‘முதல்நாளே அசுரன் படத்தைப் பார்த்தேன். தமிழில் ஒரு நாவல் படமாக்கப்படுவது அரிதான விஷயம். படத்தில் மொழி சரியாகக் கையாளப்படவில்லை. படம் சிதம்பரத்தின் பார்வையில் சொல்லபட்டிருந்தால் உலகத்தரத்துக்குப் போயிருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.