வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (09:27 IST)

அசுரன் படத்தை மிஸ் செய்துவிட்டு புலம்பும் விநியோகிஸ்தர்கள்

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது

இந்த நிலையில் அசுரன் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் இந்த படத்தின் வியாபார பேச்சுவார்த்தை நடைபெற்றபோது தயாரிப்பாளர் தாணு கூறிய விலையை எந்த விநியோகஸ்தர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த சில வருடங்களாக தனுஷின் படங்கள் நல்ல வெற்றியை பெறாத நிலையில், அசுரன் படத்தை இவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயங்கினார்

இதனை அடுத்து தயாரிப்பாளர் தாணு இந்த படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொந்தமாகவே ரிலீஸ் செய்தார். தற்போது இந்த படம் வசூல் மழையை பொழிந்து வருவதால் இந்த படத்தை வாங்காமல் விட்டு விட்டோமே என விநியோகஸ்தர்கள் புலம்பி வருகின்றனர்

தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு ஷேர் கொடுக்கும் என்றும், இதைத்தவிர சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒட்டுமொத்த லாபமும் தயாரிப்பாளர் ஒருவருக்கே செல்கிறது என்றும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன