செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:04 IST)

விவசாயிகளுக்கு ஆதரவாக பா ரஞ்சித் டிவீட்!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இயக்குனர் பா ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது இயக்குனரும் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் விவசாயிகள் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள டிவீட்டில் ‘நாங்கள் விவசாயிகள் போராடும் காரணத்துக்காக ஆதரவாக இருக்கிறோம். இந்த போராட்டம் குறித்து கேள்வி எழுப்புவர்கள் அவர்களின் போராட்டம் மற்றும் வாழ்வாதாரம் குறித்த அறிவை பெறவேண்டும். பொறுப்புள்ள குடிமகனாக நாம் விவசாயிகள் போராட்டத்துக்கு யார் யாரெல்லாம் எதிராக பேசுபவர்கள் என்று யோசிக்க வேண்டும். அவர்களின் அந்த கருத்து அவர்கள் விவசாயிகள் பற்றி கொண்டுள்ள கருத்தின் வெளிப்பாடாகும்.’ எனக் கூறியுள்ளார்.