விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு!
கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கி கடங்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவு.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானதில் நேற்று ஆன்லைன் சூதாட்டம், தனி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று பல்வேறு சட்ட முடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்