திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (14:10 IST)

கமலோடு நடிக்க மறுத்த சத்யராஜ்… எந்த படம்? எந்த கதாபாத்திரம் தெரியுமா?

கமலோடு வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார் சத்யராஜ்.

கமல் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் கமலுடன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சத்யராஜைதான் அனுகினாராம் இயக்குனர் கௌதம் மேனன். ஆனால் அவர் மறுக்கவே பின்னர் அருண் பாண்டியனைக் கேட்டுள்ளார். அவரும் மறுக்கவே பின்னர் பிரகாஷ்ராஜ் அனுகி அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.