1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (18:48 IST)

பா ரஞ்சித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி மாற்றம்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் விளம்பர நிறுவனத்தின் சார்பில் உருவாகிய திரைப்படம் குதிரைவால்
 
இந்த படத்தை மனோஜ் லியோன் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் ஆகியோர் இயக்கி வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மார்ச் 4ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையில், கிரிதரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.