திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (17:29 IST)

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 
 
இந்நிலையில் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது என்பதும் அதில் திரிஷா நடித்துள்ள குந்தவை கேரக்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.