தொடர்புடைய செய்திகள்
- சாளக்கிராம கல் எவ்வாறு விஷ்ணு பகவானின் அம்சமாக கருதப்படுகிறது...?
- இராமநாதபுரத்தில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை கோவில் பற்றிய சிறப்புக்கள் !!
- ராகு பகவானின் பரிபூரண அருளை பெற உதவும் மந்திரம் !!
- திருவண்ணாமலையை சுற்றியுள்ள புனித தீர்த்தங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!
- பழநி மலை முருகனும் அருணகிரிநாதர் பற்றிய தகவல்களும் !!
துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பானது ஏன்...?
துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
மேலும் மருத்துவ ரீதியாக துளசி செடி இலையானது காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல நோய்களை குணப்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
துளசி இலையின் நுனிப்பகுதியில் பிரம்மனும், அடிப்பகுதியில் சிவபெருமானும், நடுவில் நாராயணனும் வசிக்கிறார்கள்.
இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் சாளக்கிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள்.
துளசித் தீர்த்தமானது கங்கைக்கு நிகரானது, அதனால்தான் மும்மூர்த்திகளும், தேவர்களும் துளசியில் வாசம் செய்கிறார்கள். பெண்கள் துளசி மாடம் வைத்து, தினமும் பூஜை செய்து வந்தால், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம்.
அடுத்த கட்டுரையில்
