செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:44 IST)

'ஆஸ்கார் விருது' வென்ற இசையமைப்பாளர் ரியுச்சி சகாமோட்டோ காலமானார்

Ryuichi Sakamoto
பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ரியுச்சி சகாமோட்டோ  உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71 ஆகும்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல சினிமா இசையமைப்பாளர் ரியுச்சி சகாமோட்டோ. இவர், கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான ' தி லாஸ்ட்' என்ற படத்திற்கு இசையமைத்தற்காக, ஆஸ்கர் விருது வென்றார்.

அதேபோல், மேரி கிறிஸ்துமஸ், மிஸ்டர் லாரன்ஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்தற்காக பாப்டா விருதை வென்றார். பல படங்களுக்கு இசையமைத்ததுடன், இசை ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார், இசை உலகில் உயரிய விருதான கிராமி விருதையும் வென்றார்.

இந்த நிலையில், புற்று  நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரியுச்சி சகாமோட்டோ(71),சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.