திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (18:16 IST)

நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை... உலகின் முன் தோன்றுவேன்’ - அம்ரித் பால் சிங்

Amritpal singh
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் அனந்த்புர் கல்சா ஃப்வுஜ் என்ற பெயரில் ஒரு தீவிரவாத குழுவை உருவாக்கி வந்த நிலையில், பஞ்சாப் மா நில  போலீஸார் அவரை கைது செய்ய முடிவுசெய்தனர்.

இதையடுத்து,  அம்ரித் பால் சிங் தலைமறைவானார். அவர் மீது வழக்குகள் வழக்குப் பதிவு செய்து, அவரை போலீஸார் தேடி வந்த  நிலையில், அவர் பல்வே இடங்களில் சாலைகளில் உலவும் வீடியோக்கள் வெளியாகின.

இந்த நிலையில், அம்ரித்பால் சிங் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,’  நான் தப்பியோடிவிட்டதாக  நினைப்பவர்களின் நினைப்பு தவறு.  நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் என் ஆதரவாளர்களுடன்  உலகின் முன் தோன்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பஞ்சாப் அமிர்தரசில் உள்ள பொற்கோவிலில் அலது பத்திதிண்டாவில் உள்ள குருத்வாராவில் அவர் தோன்றுவார் என்று தகவல் வெளியாகி வருவதால் பஞ்சாப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸாரும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமடைந்துள்ளனர்.