வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (17:06 IST)

இனியொருமுறை கூல் சுரேஷ் இந்த மாதிரி நடந்து கொண்டால்- ஐஸ்வர்யா எச்சரிக்கை

Aishwarya
தமிழ் சினிமாவில்  சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கூல் சுரேஷ். திரையரங்குகளில் படங்கள் வெளியாகும்போது, முதல்நாள் முதல்ஷோவை பார்த்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், மன்சூர் அலிகானின் ‘சரக்கு’   என்ற  படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கூல் சுரேஷும் கலந்து கொண்டார்.

இந்த விழா மேடையில் பேசிய அவர் திடீரென கையில் வைத்திருந்த மாலையை அங்கு நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண் ஐஸ்வர்யா  மீது போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பெண்ணின் அனுமதி இன்றி மாலை போட்டது தவறு என்று கூல்  சுரேஷை மன்சூர் அலிகான் கண்டித்தார்.

இந்த சம்பவம் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பிரபல மீடியாவுக்கு  பேட்டியளித்த ஐஸ்வர்யா, '''இதுக்கு முன்பு இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் செய்திருந்தார். இனியொருமுறை சுரேஷ் இந்த மாதிரி நடந்து கொண்டால் அவர் கன்னத்தில் ஒரு அடியாவது கொடுத்திருப்பேன். இல்லாட்டி போலீஸில் புகார் அளித்திடலாம் என இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.