லியோ படத்தின் முக்கிய அப்டேட்களைக் கொடுத்த தயாரிப்பாளர் லலித்!
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் லலித் குமார் படம் பற்றிய சில தகவல்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் “இன்னும் விஜய் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் நான் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டேன். சிறப்பாக வந்துள்ளது. படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ்நாட்டில்தான் நடக்கும். ஆனால் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆடியோ ரிலீஸுக்கு பிறகு தொடங்கும்.” எனக் கூறியுள்ளார்.