வித்தியாசமான வெள்ளை நிற உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஐஸ்வர்யா லஷ்மி தனது தாய்மொழியான மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அதையடுத்து தமிழில் அவருக்கான வாய்ப்பு விஷால் நடித்த ஆக்ஷன் படம் மூலமாக வந்தது. அந்த படத்தில் அவருக்கு மிகச்சிறிய வேடமே. அவரை கவனிக்கத்தக்க நடிகையாக்கியது பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்கள்.
மருத்துவம் படித்த ஐஸ்வர்யா லஷ்மி எதேச்சையாக சினிமாவில் நுழைந்து இன்று நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வரும் இவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது வெள்ளை நிற வித்தியாசமான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.