1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:08 IST)

லால் சலாம் படத்தின் டப்பிங் தொடக்கிய சூப்பர் ஸ்டார்

lal salam
ஜெயிலர் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு, ரஜினிகாந்த் லால் சலாம்  படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலையில் முதல்கட்ட ஷூட்டிங் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து முடித்தார்.

சமீபத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் தங்களின் காட்சிகளில் நடித்து முடித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

கிரிக்கெட் சம்மந்தமான கதை என தகவல் வெளியாகும் நிலையில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த நிலையில்  இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணியை  ரஜினிகாந்த்  தொடங்கியுள்ளார்.
 
இதுபற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: இன்று ''மகிழ்ச்சிறந்த நாள்….எனது தந்தையுடன் டப்பிங் பணியில்''ஈடுபட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.