திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:50 IST)

நோட்டா படக்குழு ரசிகர்களுக்க வழங்கியுள்ள சூப்பர் வாய்ப்பு

நோட்டா படக்குழு ஹே மினிஸ்டர் பாடலில் தங்கள் பெயர் இடம்பெற ரசிகர்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது
 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடலுக்கான போஸ்டரை நாம் உருவாக்கி அனுப்பினால், அதில் ஒரு போஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த போஸ்டராக அறிவிக்கப்பட்டு ஹே மினிஸ்டர் என்ற பாடலில் பயன்படுத்தப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.