1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (18:22 IST)

நோட்டாவால் அச்சத்தில் அரசியல் தலைவர்கள்...

நோட்டா படத்தின்  டிரைலர் தெலுங்கானாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குதுர் நாராயண ரெட்டி மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 
அக்டோபர் 5 ம் தேதி நோட்டா படத்தின் உலகளாவிய வெளியீடுக்கு முன்னதாக, இந்த திரைப்படத்தை பார்வையிடவும், தங்கள் கவலையைத் தெளிவுபடுத்தவும் சில அரசியல்வாதிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கவலையைப் பிரதிபலிக்கும் விதமாக, தற்பொழுது படத்தினுள்  எந்தவொரு தனிப்பட்ட அல்லது ஒரு அரசியல் கட்சியை தவறான நோக்கத்தில் காட்டவில்லை என அப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
 
மேலும் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நேரத்தில் "நோட்டா" படத்தை வெளியிடுவதால் படத்தின் கதையை பற்றி சிலர் சந்தேகித்துள்ளனர்.  இது ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதாக ஊக்குவிக்கும் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் திரைப்படம் எந்தவொரு விவகாரத்தை  பற்றியும்  விவாதிக்கவில்லை என்பதையே நான் உறுதிபடுத்துகிறேன்,  படத்தின் கதை முற்றிலும் வேறுபட்டது. படத்தில்  இளைஞர்களுக்கு செல்வாக்கு கொடுக்கும் நோக்கத்தில் படம் எடுக்கவில்லை. இது முற்றிலும் வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை அறியும் விதத்தில் உள்ளது என்று கூறினார்.
 
தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது எனவும் அது யாரையும் குறிக்கவில்லை அதனால் நீங்கள் படத்தை பாருங்கள்,   இளைய முதலமைச்சராக விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பை பார்த்து ரசியுங்கள்  எனவும் தெரிவித்துள்ளார் . 
 
நோட்டா திரைப்படம்  அக்டோபர் 5 ம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.