வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (12:27 IST)

ட்ரெய்லர் கூட வரலை.. அதுக்குள்ள 18 ஆயிரம் டிக்கெட் காலி! – மாஸ் காட்டும் “லியோ”!

Leo
விஜய் நடித்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் லியோ படத்திற்கான டிக்கெட்டுகள் இப்போதே வேகவேகமாய் விற்று வருகிறது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 19ல் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சமயத்தில் வெளியாக இருந்த மற்ற படங்கள் எல்லாம் ரிலீசை தள்ளிப்போட்டுள்ளன. சில படங்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகின்றன. அந்த அளவு போட்டி இல்லா சோலோ ஸ்டாராக களம் இறங்கும் அளவிற்கு லியோ படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள்.


லியோ படத்திற்கான வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள அஹிம்சா ப்லிம்ஸ் படத்திற்கான எதிர்பார்ப்பை பொறுத்தி ஒரு மாதம் முன்னரே தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. தற்போது வரை ஓபன் செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படம் வெளியாகும் முன்னரே 18 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று தள்ளியுள்ளனர். இத்தனைக்கும் இன்னும் படத்தின் ட்ரெய்லர் கூட வெளியாகவில்லை. மேலும் டிக்கெட் முன்பதிவுகள் அதிகரிப்பதால் திரையரங்கு காட்சிகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

Edit by Prasanth.K