‘மாஸ்டர்’ சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற தகவல் ஏற்கனவே கசிந்து விட்டது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடாமல் மவுனம் காத்து வந்ததால் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் சற்று முன் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெகதீஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்திலும் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் மாஸ்டர் படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ள்து
இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவரும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது