வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (09:44 IST)

மாஸ்டர் படத்தின் கதை இதுதான் – வைரலாகும் புகைப்படம்!

மாஸ்டர் படத்தின் கதை சம்மந்தமாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் 8 மாதங்களுக்கு மேலாகக் காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கதை கசிந்துள்ளது.

அரபு நாடுகளுக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான கதை சுருக்கமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது இப்போது வெளியாகியுள்ளது. அதில் ‘இளம் விரிவுரையாளரான விஜய் குடிக்கு அடிமை ஆகவே, அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறார். அங்கே இருக்கும் சிறுவர்கள் போதைக்கு அடிமையாக அந்த பள்ளியின் பொறுப்பாளர் விஜய் சேதுபதிதான் காரணம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.  இதையடுத்து இருவருக்கும் இடையே உருவாகும் பிரச்சனையில் விஜய் எப்படி வெற்றிகரமாக விஜய் சேதுபதியை வீழ்த்துகிறார் என்பதே கதை’ என சொல்லப்பட்டுள்ளது.அதில் மேலும் படத்தின் நேரம் 180 நிமிடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.