சிம்பு படத்திற்கு வார்னிங் கொடுத்த ரசிகர்கள்

Last Updated: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (15:08 IST)
நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்" படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று  காலை 5 மணிக்கே படம் வெளியாகியது. ஆனால், சிம்பு ராஜாவா வந்தாரா என்பது தான் இங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. 


 
சுந்தர்.சி இயக்கி லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். வெளிவருவதற்கு முன்பே தேவையில்லாத சர்ச்சைகளை சந்தித்து வந்த இப்படம் சர்ச்சைகளின் மத்தியில் நிச்சயம் வெற்றி அடையும் என குறுக்கு கணக்கு போட்டவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
சிம்புவின் ரசிகர்களை தவிர மற்ற அனைவரையும் மொக்க படம் யாரும் தியேட்டருக்கு போய்டாதீங்க என்றெல்லாம் நெகட்டீவ் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். 
 
அதனையும் மிஞ்சி சிலர், அண்டாவுல பால் ஊற்றணுமா? படத்திற்கே பால் ஊற்றியாச்சு போ போ ஓரம் போ என்றெல்லாம் படு மோசமாக நெகடிவ் விமர்சனத்தை கொடுத்துவருவதை பார்க்கமுடிகிறது.
 
சிம்பு சும்மா இருந்திருந்தலே படம் சுமாரா ஓடியிருக்கும் போல .. ! 


இதில் மேலும் படிக்கவும் :