வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:18 IST)

சிம்பு பட ட்ரைலரை வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்..! பால் ஊத்திடுவாங்கபோலயே ..!

நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவா தான் வருவேன்" படத்தின் ட்ரைலரை நெட்டிசன்ஸ் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். 


 
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள "வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியது .  நடிகர் சிம்புவினால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இப்படம் தெரிந்தோ தெரியாமலோ ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிவிட்டது. 
 
"தவளை தன் வாயால் கெடுமாம்"  அப்படித்தான் தன் படத்திற்கு தானே உலைவைத்துக்கொண்டார் சிம்பு. இதுவரை எந்த ஒரு நடிக்கணும் தானே தன் படத்திற்கு அண்டா அண்டாவா பால் ஊத்துங்க ..கட் அவுட் வைங்க என்றெல்லாம் சொல்லி கூட நாம் கேட்டிருக்கமாட்டோம். ஏன் இப்படி தேவையில்லாமல் வம்பில் மாட்டிக்கொண்டார் சிம்பு என்று கோடம்பாக்கத்தில் முணு முணுக்கின்றனர். 
 
மேலும் தன் படத்திற்கு தானே விளம்பரம் தேடி கொள்வதற்காக சிம்பு இப்படி செய்திருக்கிறார் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர். சரி அப்படியாச்சும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கட்டுமே என்று நினைத்தால் அது தான் இல்லை.  சிம்பு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தாலே  இந்த படம் சுமாரா ஓடியிருக்கும் போல. 
 
இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. இந்த ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளதா இல்லையா என்று பிரபல ரசிகர்களை ட்ராக்கர் ஒருவர் வாக்கு பதிவு ஒன்றை நடத்திலுள்ளார். 
 
அதில் 47 சதவீதம் பேர் ஆம் என்றும் மீதமுள்ள 53 சதவீதம் பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர். ட்ரைலருக்கே இந்த கதி என்றால் இன்னும் படம் வந்தால் என்ன கதி ஆகப்போகுதோ ...! சொன்னதை போல பால் ஊற்றிவிடுவார்கள் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.