1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (19:16 IST)

என் படம் பார்க்க டிஷ்யூ பேப்பர் தேவையில்லை: பிரபல தயாரிப்பாளர்

கடந்த வெள்ளியன்று வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தொடங்கும் முன்னர் இந்த படத்தை பார்ப்பவர்கள் டிஷ்யூ பேப்பரை கையில் வைத்து கொள்ளவும் என்ற ஸ்லைடு போடப்படும். அந்த அளவுக்கு இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்கின்றது என்பதை படக்குழுவினர்களே சொல்லாமல் சொன்ன ஸ்லைடு தான் இது.
 
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் தான் தயாரித்துள்ள 'அண்டாவ காணோ' படத்தின் ரிலீஸ் தேதியை தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலின் அண்ணன் மனைவி ஸ்ரேயாரெட்டி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் விஷாலின் 'திமிறு' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் கூறியபோது, 'இந்த படம் யூ சான்றிதழ் வாங்கிய ஒரு குடும்ப நகைச்சுவை படம். ஏ சான்றிதழ் பட விரும்புகளும் இந்த படத்தை பார்க்கலாம். ஆனால் இந்த படத்தில் ஆபாசமான அருவருக்கதக்க வசனங்களோ, பிட்டு காட்சிகளோ இல்லை. மேலும் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு டிஷ்யூ பேப்பர் தேவையில்லை. அதுமட்டுமின்றி இந்த படத்தை பார்த்துவிட்டு திரையரங்குகளில் இருந்து வெளியே வரும்போது முகத்தை மறைத்து கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை' என்று இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை கிண்டலடித்து கூறியுள்ளார்.