1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (23:58 IST)

அஜித்துடன் மோதும் ஸ்ரேயாவின் அண்டா! உடையுமா? நெளியுமா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஒருசில படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



 


இந்த நிலையில் இதே ஆகஸ்ட் 11ஆம் தேதி விஷாலின் அண்ணி ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்' திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அஜித் படம் என்றால் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகும் என்பதால் 'அண்டாவ காணோம்' படத்திற்கு நல்ல திரையரங்கு கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது

எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதையும் மீறி வெளியிடும் முடிவை படக்குழுவினர் எடுத்தால் அண்டாவிற்கு எந்த அளவுக்கு டேமேஜ் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.