செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (21:41 IST)

அண்டாவ தேடிய 1 லட்சம் பேர்; இயக்குநர் குஷி

அண்டாவ காணோம் படத்தில் என்னதான் இருக்கிறது என ஆவலோடு இதுவரை படத்தின் டிரைலரை 1 லட்சுத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


 

 
வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் திரைப்படம் அண்டாவ காணோம். ஸ்ரேயா ரெட்டி திருமணத்திற்கு நடித்திருக்கும் முதல் படம். அது என்ன அண்டாவ காணோம் என்று பலரும் ஆவலோடு இந்த படத்தின் டிரைலரை பார்த்து வருகின்றனர். பொதுவாக கிராமங்களில் ஒவ்வொன்றும் சிறப்புதான். அதுபோல அண்டாவை வைத்து படம் இயக்கியுள்ளார் இயக்குநர் வேல்மதி. 
 
இதுவரை இந்த டிரைலரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.   
 

நன்றி: JSK Film Corporation