புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 ஜூலை 2019 (17:29 IST)

சேலையில் செம்ம கவர்ச்சி காட்டிய நித்யா மேனன் - வைரலாகும் புகைப்படங்கள் !

தனக்கு கொடுக்கப்படும் அத்தனை  கதாபாத்திரங்களையும் அவ்வளவு  சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்து முடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நித்யா மேனன். 


 
தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி  போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன்,  மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர். ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். 
 
அந்த வகையில் இவர் தற்போது , சைக்கோ, தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அக்‌ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். 


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த நித்யா மேனன் செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்து புகைப்படக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.