வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:06 IST)

ராஜமௌலி படத்தில் நித்யா மேனன்! என்ன ரோல் தெரியுமா?

இயக்குனர் ராஜமௌலி படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் அவர் படத்தில் கதாநாயகியாகவே  நடிக்கும் வாய்ப்பு நடிகை நித்யா மேனனுக்கு கிடைத்துள்ளது. 


 
‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படத்தை அடுத்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’ இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட ஹீரோக்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக அலியாபட், மற்றும் ஹாலிவுட் நடிகை டெய்ஸி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
 
திடீரென்று நடிகை டெய்ஸி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார். இந்தநிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடுவதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் இயக்குனர் ராஜமௌலி. இதற்காக நடிகைகள் நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர்களில் நித்யாவுக்கு ஸ்கிரின் சோதனை முடிந்தது. அவர் டெய்ஸிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்ஸியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.